மனித மூளை vs. செயற்கை நுண்ணறிவு: எதிர்காலப் போட்டி தவிர்க்க முடியாதது – நீயா நானா கோபிநாத் பேச்சு !

மனித மூளை vs. செயற்கை நுண்ணறிவு: எதிர்காலப் போட்டி தவிர்க்க முடியாதது – நீயா நானா கோபிநாத் பேச்சு !
X
செயற்கை நுண்ணறிவு காலத்தில் மாணவர்கள் சுய சிந்தனையுடன் முன்னேற வேண்டும் என நீயா நானா கோபிநாத் பேச்சு.
கோவை கருமத்தம்பட்டியில் உள்ள தமிழ்நாடு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற முதலாம் ஆண்டு மாணவர் வரவேற்பு விழாவில் பேசிய நீயா நானா புகழ் கோபிநாத், “மனித ஆற்றலுக்கும் தொழில்நுட்பத்திற்கும் இடையிலான போட்டி பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. தற்போது அது செயற்கை நுண்ணறிவு (AI) எனும் வடிவில் வெளிப்படுகிறது. மனிதர்களால் உடனடியாக வழங்க முடியாத தகவல்களையும், AI வினாடிகளில் தருகிறது. எனவே எதிர்காலத்தில் மனித மூளைக்கும் AI-க்கும் இடையே கடுமையான போட்டி உருவாகும்,” என்று கூறினார். மேலும், “மாணவர்கள் இன்ஃப்ளூயன்சர்கள் சொல்வதை கண்மூடித்தனமாக பின்பற்றாமல், தாங்களாகவே சிந்தித்து செயல்பட வேண்டும். உலகின் முன்னணி நிறுவனங்களில் தமிழர்களே முக்கிய பங்காற்றி வருகின்றனர் என்பது பெருமை,” என்றும் வலியுறுத்தினார். இவ்விழாவில் பார்க் கல்வி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி அனுஷா ரவி, கார் டெக்னாலஜிஸ் நிறுவனர் ராஜேஷ் குமார், கல்லூரித் தலைவர் ரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெற்று கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் தங்க நாணயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
Next Story