மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் (VVPAT) பொருத்தப்படும் கருவியினை பார்வையிட்ட ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் இருந்து, நாமக்கல் மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் (VVPAT) பொருத்தப்படும் கருவியினை பார்வையிட்டார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் இருந்து, கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் (VVPAT) பொருத்தப்படும் கருவியினை அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் இருந்து, 200 எண்ணிக்கையிலான, VVPAT எனப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் பொருத்தப்படும் கருவி, நாமக்கல் மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டு, பாதுகாப்பு இருப்பறையில் வைக்கப்பட்டுள்ளது. இக்கருவி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் பொருத்தப்படும் ஒரு பாகமாகும். இதில் வாக்காளர்கள் தாங்கள் பதிவு செய்த வாக்கினை ஆறு வினாடிகள் சரிபார்த்துக் கொள்ளலாம்.
Next Story