ரூ.02.43 இலட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகள்

X
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (27.01.2025) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 360 மனுக்கள் பெறப்பட்டது. அம்மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா நலவாரியத்தின் கீழ் 01 பயனாளிக்கு ரூ.50,000/- மதிப்பீட்டிலான உயர்கல்வி உதவித்தொகைக்கான ஆணையினையும், பாம்பு கடித்து இறந்தமைக்காக காளையார்கோவில் வட்டத்தை சார்ந்த 01 நபரின் குடும்பத்தினருக்கு, முதலமைச்சர் பொது நிவாரண நிதியின் கீழ் ரூ.1,00,000/- மதிப்பீட்டிலான நிவாரண தொகைக்கான காசோலையினையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 01 மாற்றுத்திறனாளிக்கு ரூ.15,750/- மதிப்பீட்டிலான மடக்கு சக்கர நாற்காலியினையும், 03 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.37,570/- மதிப்பீட்டிலான முடநீக்கியல் சாதனங்களையும், 05 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.6,340/- வீதம் மொத்தம் ரூ.31,700/- மதிப்பீட்டிலான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களையும், 03 மாற்றுத்திறகாளுக்கு ரூ.2,840/- வீதம் மொத்தம் ரூ.8,520/-மதிப்பீட்டிலான காதொலி கருவிகளையும் என ஆக மொத்தம் 14 பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.2,43,540/- மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி அவர்கள் உட்பட அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

