05 பயனாளிகளுக்கு ரூ.2,40,010 மானியத்தில் வேளாண் இயந்திரங்களை ஆட்சியர் வழங்கினார்.

வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் செயல்பாடு மற்றும் பராமரிப்பு குறித்த முகாமினை ஆட்சியர் துவக்கி வைத்து பார்வையிட்டார்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் செயல்பாடு மற்றும் பராமரிப்பு குறித்த முகாமினை ஆட்சியர் கிரேஸ பச்சாவ் துவக்கி வைத்து பார்வையிட்டார். முகாமில் விவசாயிகளுக்கு தனியார் வேளாண் இயந்திரங்கள் (ம) கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களில் பொறியாளர்கள் (ம) தொழில்நுட்ப பணியாளர்கள் மூலமாக வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை இயக்குதல் மற்றும் பராமரித்தல், குறித்த தெளிவுரை, மரசெக்கு எண்ணெய் மற்றும் உழுவை இயந்திரங்கள் பயன்பாடு குறித்த செயல்முறை விளக்கம் அளித்திடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், டிராக்டர்கள் மற்றும் உபகரணங்களை விவசாயிகள் கையாண்டு இயக்கிடவும் வழிவகை செய்யப்பட்டிருந்தது. வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் திறன்மிகு இயக்கம் மற்றும் பராமரிப்பு குறித்து இந்த முகாமில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதுபோன்ற வேளாண் இயந்திரங்கள் குறித்த செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு முகாம்களை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ஆட்சியர் விவசாயிகளிடம் தெரிவித்தார். பின்னர், வேளாண்மை பொறியியல் துறை சார்பில், வேளாண்மை இயந்திர மயமாக்கும் திட்டத்தின் கீழ் 2024-25ஆண்டிற்கு முதல் தவணையாக பெறப்பட்ட நிதியிலிருந்து மொத்தம் 05 பயனாளிகளுக்கு ரூ2,40,010 மானியத்தில் வேளாண் இயந்திரங்களை ஆட்சியர் வழங்கினார்.
Next Story