1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன்

X
சிவகங்கை மாவட்டத்தில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வருகை தந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில்..," மடப்புரம் பகுதியை சார்ந்த அஜித்குமார் உயிரிழந்த வருத்தத்குக்குறியது. அவரது குடும்பத்தினருக்கு வி.சி.க., சார்பில் ஆறுதல் தெரிவித்தோம். பாதிக்கப்பட்ட அஜித் குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிதியுதவி, வீட்டுமனைப் பட்டா மற்றும் அரசு வேலைக்கான ஆவணங்கள் என ஏற்கனவே வழங்கியுள்ளது. இது ஆறுதல் அளிக்கிறது, ஆனாலும் அஜித்தின் குடும்பத்திற்கு ஒருகோடி ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். அதே போல் அஜித்தின் வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற பரிந்துரை செய்த தமிழக முதல்வரின் கட்ஸை வரவேற்கிறேன். அவரின் செயல்பாடு இதில் சிறப்பாக உள்ளது. அதே போல் தமிழக முதல்வர் அல்லது துணை முதல்வர் மடப்புரம் கிராமத்திற்கு நேரடியாக வந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்து பிரச்னைகள் குறித்து அவர்களிடம் கேட்டறிய வேண்டும். லாக்கப் மரணத்தில் குற்றம் செய்தவர்கள் யாரும் தப்பிக்க கூடாது. அதே போல் தமிழகம் முழுவதும் மட்டுமல்ல இந்தியாமுழுவதும் மனித உரிமை மீறல் நடக்கவிடாமல் கட்டுப்படுத்த. லாக்கப் மரணங்கள் இல்லாத அளவிற்கு செயல்படவேண்டும் " என்றார்.
Next Story

