1கிலோ கஞ்சா  பறிமுதல்.... 3  பேர்  கைது

1கிலோ கஞ்சா  பறிமுதல்.... 3  பேர்  கைது
X
மண்டைக்காடு
குமரி மாவட்டம்  மண்டைக்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக  போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் 1கிலோ வுக்கும் அதிகமாக  அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்தனர். ஒரு  2 சக்கர  வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில்  நாகர்கோவில், ஒழுகினசேரி பகுதியை சேர்ந்த சுப்பிரமணிய சர்மா என்பவரின் மகன் சந்தோஷ்குமார்(27)  கிருஷ்ணன்கோவில் காமராஜபுரம் பகுதியை சேர்ந்த ஜோஸ்பின் ராஜன் என்பவரின் மகன் ஜோஸ் பெபின் (19) மேலும் ஒரு இளஞ்சிறார் உட்பட  மூன்று பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
Next Story