1கோடியே 30லட்சம் செலவில் அரசு பள்ளி திறப்பு

திருவள்ளூர் அருகே தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் ரூபாய் ஒரு கோடியே 30 லட்சம் செலவில் உளுந்தை கிராமத்தில் அரசு பள்ளியில் கூடுதல் பள்ளி கட்டிடங்கள் திறப்பு
திருவள்ளூர் அருகே தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் ரூபாய் ஒரு கோடியே 30 லட்சம் செலவில் உளுந்தை கிராமத்தில் அரசு பள்ளியில் கூடுதல் பள்ளி கட்டிடங்கள் திறப்பு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உளுந்தை டாக்டர் எம்.ரமேஷ் தலைமையில் சிறப்பாக கட்டப்பட்டுள்ளது . திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அருகே உளுந்தை ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளி வளாகத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் அரசு பள்ளி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என தனிக்கவனம் செலுத்தி அவரது சொந்த செலவில் ரூபாய் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் வகுப்பறைகள் கொண்ட நவீன வசதிகளுடன் ஏசி மின்விசிறி ஆரோ வாட்டர் சிறந்த இசையுடன் கூடிய ஸ்மார்ட் போர்டு வசதி பள்ளி வளாகத்தில் 23 சிசிடிவி கேமராக்கள் உடன் கூடிய வசதிகளுடன் கூடிய கட்டிடத்தை இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த அரசு பள்ளி தற்போது தனியார் பள்ளிகளுக்கு இணையாக புத்தம் பொலிவுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரையில் எந்த ஒரு அரசு பள்ளியிலும் இதுபோன்ற குளிரூட்டப்பட்ட வகுப்பறை, கண்காணிப்பு கேமரா, நவீன ஸ்மார்ட் வகுப்புகள் உடன் எந்த அரசு பள்ளியிலும் இதுவரையிலும் இதுபோன்று துவக்கப்பட்டது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் இன்று பள்ளிகள் திறக்கும் நிலையில் பள்ளிக்கு வரும் மாணவ மாணவியர் பள்ளி ஆசிரியர்கள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்டி மேல தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு ஆசிரியர்களும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் ரோஜா பூ இனிப்புகள் கொடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர் இதைக் கண்ட மாணவர்கள் மேலும் உற்சாகமடைந்து பள்ளி வகுப்பறைகளுக்கு சென்று அமர்ந்தது குறிப்பிடத்தக்கது இதை அடுத்து பள்ளி புதிய கட்டிடம் திறக்கப்பட்டு மாணவர்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை ஊராட்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் அவர்களின் இந்த பணியை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் வெகுவாக வரவேற்றனர்.
Next Story