சேலம் வடக்கு தொகுதியில் ரூ.1 கோடியில் புதிய திட்டப்பணிகள்
சேலம் வடக்கு தொகுதியில் ரூ.1 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளை எம்.எல்.ஏ., ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.
சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் நேற்று புதிய திட்டப்பணிகள் தொடங்கப்பட்டது.
முதலில், மாநகராட்சி 7-வது வார்டில் ஆத்துக்காடு பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் மற்றும் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து 8-வது வார்டில் மாரியம்மன் கோவில் பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், 12-வது வார்டில் ராஜகணபதி நகரில் கலைஞர் கால்வாய் அமைத்தல், 16-வது வார்டில் வாசகர் சாலை பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைத்தல், 10-வது வார்டில் ஸ்ரீராம் நகரில் கழிவுநீர் வாய்க்கால் அமைத்தல், 9-வது வார்டு மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிக்கு சுமார் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைப்பதற்கான பணியையும் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். நேற்று ஒரேநாளில் 7 இடங்களில் நடந்த நிகழ்ச்சியில் ரூ.1 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். முன்னதாக வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் குறைகளை கேட்டறிந்து அவற்றை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.