1 யுனிட் மணல் மற்றும் டிராக்டர், JCB ஆகியவற்றை* பறிமுதல்

தங்களது பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் திருட்டு, கள்ளச்சாராயம், கஞ்சா, போன்ற போதைப்பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் பற்றிய விவரங்கள் தெரிந்தால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும் என்றும் விழிப்புணர்வு
அரசு அனுமதியின்றி டிராக்டரில் மணல் திருடிய நபரை கைது பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு உட்கோட்டம் வ.களத்தூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று 23.05.2025 டிராக்டரில் மணல் திருடுவதாக கிடைத்த இரகசிய தகவலின்படி வ.களத்தூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் விநாயகம் மற்றும் அவரது குழுவினர் வ.களத்தூர் பகுதியில் சிறப்பு ரோந்து மேற்கொண்ட போது வெள்ளாற்றில் இருந்து டிராக்டரில் மணல் திருடிக்கொண்டு வந்த நபர்களை பிடித்து விசாரித்தபோது 1.ஆனந்தராஜ் (27) த/பெ ஞானபிரகாசம், நடுத்தெரு, அயன்பேரையூர், வேப்பந்தட்டை வட்டம், பெரம்பலூர் மாவட்டம்.2.சீனிவாசன் (29) த/பெ பன்னீர்செல்வம், வடக்கு தெரு, அயன்பேரையூர், வேப்பந்தட்டை வட்டம், பெரம்பலூர் மாவட்டம். 3.ராஜேஸ் (28) த/பெ கோபால் தெற்கு தெரு பெருமத்தூர் குன்னம் வட்டம் பெரம்பலூர் மாவட்டம்.* என்பது தெரியவர மேற்படி நபரை கைது செய்து வழக்கு பதிவு செய்து மேற்படி எதிரியிடமிருந்து 1 யுனிட் மணல் மற்றும் டிராக்டர், JCB ஆகியவற்றை பறிமுதல் செய்த வ.களத்தூர் காவல்நிலைய காவல்துறையினர் மேற்படி எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story