வியாபாரிகளிடம் ரூ.1.34 லட்சம் பறிமுதல் !
ரூ.1.34 லட்சம் பறிமுதல்
கோவில்பட்டி அருகே பறக்கும் படை வாகன சோதனையில் வியாபாரிகளிடம் இருந்து ரூ.1 லட்சத்து 34 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தெற்கு குருவி குளம் பகுதியில் இருந்து கோவில்பட்டி நோக்கி வந்த வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அதில் ரூ.73 ஆயிரத்து 700 இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் பொரிகடலை, உளுந்து, சீனி உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து, வியாபாரிகளிடமிருந்து வசூலித்ததாகக் கூறினர். ஆனால் அவர்களிடம் அதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லை. இதையடுத்து அந்த பணத்தை கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்து, கோவில்பட்டி தாசில்தார் சரவணப் பெருமாள் முன்னிலையில் வட்ட தேர்தல் பிரிவு துணை தாசில்தார் வெள்ளத்துரையிடம் ஒப்படைத்தனர்.
Next Story