தஞ்சாவூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் நீரிழிவு நோயால் பாதிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் நீரிழிவு நோயால் பாதிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் நீரிழிவு நோயால் பாதிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் நீரிழிவு நோயால் பாதிப்பு 3,000 பேருக்கு காலில் புண் அறிகுறிகள் அரசு மருத்துவக்கல்லூரி டீன் தகவல் மாவட்டத்தில் 1 லட்சத்து 75ஆயிரம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாகவும் இவர்களில் 3,000 பேருக்கு காலில் பாதப்புண் அறிகுறிகள் உள்ளதாகவும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் பாலாஜிநாதன் தெரிவித்துள்ளார்.

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சர்க்கரை நோயாளிகளுக்கான பாத சிகிச்சை தொடர்பான 9 ஆவது பயிற்சி பட்டறை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் மருத்துவக்கல் லூரி முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் தலைமை தாங்கினார். மருத்துவக் கண்காணிப்பாளர் ராமசாமி, துணை முதலவர் ஆறுமுகம், நீரிழிவு நிலைய மருத்துவ அதிகாரி செல்வம், உதவி நிலைய மருத்துவ கல்லூரி இத்ரிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சென்னை காவேரி மருத்துவமனை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூத்த ஆலோசகர் டாக்டர் நாராயணமூர்த்தி, சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி பேராசிரியர் டாக்டர் முகுந்தன், தஞ்சை மருத்துவக்கல்லூரி பேராசிரியர் டாக்டர் டேனியல் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இதில் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் மருதுதுரை, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர் ஸ்ரீதர் மற்றும் நீரிழிவு துறை டாக்டர்கள், மருத்துவ மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜிதாதன் கூறியதாவது, தஞ்சாவூர் மாவட்டத்தில் இடங்களில் தேசிய சுகாதார இயக்கத்தின் வழிகாட்டுதல்படி நீரிழிவு கால் புண் பரிசோதனை திட்டம் முன்னோடி திட்டமாக நடத்தப்பட்டு வருகிறது காலில் புண் ஏற்பட்டு கால் இழப்பு ஏற்படுவதை தடுக்க இந்த சிகிச்சை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நீரிழிவு நோயாளிகளுக்கான பாத சிகிச்சை மையம் செயல்பட்டு வருகின்றன. இதற்காகரூ 1கோடியே 5 லட்சம் மதிப்பில் உபகரணங்கள் அரசால் வழங்கப்பட்டு பொருத்தப்பட்டு கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இதுவரை 250 அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு கால் இழப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளது தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சுகாதார களப்பணியாளர்கள் மற்றும் 77 ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் மூலம் சர்க்கரை நோயாளிகள் மாவட்டம் முழுவதும் கணக்கெடுக்கப்பட்டனர்.

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 75000 பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் இதில் 3000 பேருக்கு காலில் புண் ஏற்படுவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. 2500 பேருக்கு புண் ஏற்பட்டு அறுவை சிகிச்சை தேவைப்படும் நிலை உள்ளது. இந்த நீரிழிவு கால் சிகிச்சை திட்டம் மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் மருத்துவ துறையில் புதுமையான திட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Tags

Next Story