மாநகராட்சி ஒப்பந்ததாரிடம் ரூ.1லட்சம் பறிமுதல்

மாநகராட்சி ஒப்பந்ததாரிடம்  ரூ.1லட்சம் பறிமுதல்

திருப்பூரில் மாநகராட்சி ஒப்பந்ததாரிடம் இருந்து தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் ரூ. 1லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

திருப்பூரில் மாநகராட்சி ஒப்பந்ததாரிடம் இருந்து தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் ரூ. 1லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

மாநகராட்சி ஒப்பந்ததாரரிடம் ரூ.1 லட்சம் - பறிமுதல். திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ளடங்கிய 114-திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட, செவந்தாம்பாளையம் செல்லும் வழியில் உள்ள கணபதிபாளையம் அருகே தேர்தல் பறக்கும்படை குழு எம்.ரமேஷ், மற்றும் சப்-இன்ஸ் பெக்டர் ஜி.ஆண்டவர், ரவீன்குமார், சத்யா உள்ளிட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்தவழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது ரொக்கப்பணம் 1 லட்சம் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டுவந்து தெரியவந்தது. மேலும் விசாரணை நடத்தியபோது முத்தணம்பாளையம் பகுதியைசேர்ந்த பழனிச்சாமி மகன் சரவணன் என்பவர் மாநகராட்சி ஒப்பந்ததாரராக பணி செய்து வருவது தெரியவந்தது.

தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு அன்பளிப்பாக கொடுப்பதற்கு கொண்டு செல்லலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேர்தல் கூடுதல் பறக்கும் படை குழு, பணத்தை பறிமுதல் செய்து உதவிஆணையயாளர் தேர்தல் கணக்கு (பொது) தங்கவேல் ராஜனிடம் ஒப்படைத்து கருவூலத்திற்கு அனுப்பப்பட்டது.

Tags

Next Story