10 ஆண்டுக்கு பின் உத்திரமேரூர் பைபாஸ் சாலைக்கு விமோசனம்

10 ஆண்டுக்கு பின் உத்திரமேரூர் பைபாஸ் சாலைக்கு விமோசனம்

பணிகள் நடைபெற உள்ள சாலை

10 ஆண்டுக்கு பின் உத்திரமேரூர் பைபாஸ் சாலைக்கு...விமோசனம்!:பணிகளை துவக்க தமிழக அரசு ரூ.35 கோடி ஒதுக்கீடு

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் நகரில், 40,000த்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். உத்திரமேரூர் மற்றும் சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 1,000த்துக்கும் மேற்பட்டோர் உத்திரமேரூர் வழியாக, காஞ்சிபுரம்,

செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யாறு, வந்தவாசி, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். உத்திரமேரூர் பஜார் சாலை மிகவும் குறுகியதாக உள்ளதால், காலை - மாலை நேரங்களில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்பது பல ஆண்டு கோரிக்கையாக இருந்து வந்தது. இதனால், 2013ல், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, உத்திரமேரூரில் புறவழிச்சாலை அமைக்கப்படும் என,

அறிவிப்பு வெளியிட்டார். உத்திரமேரூர் புறவழிச்சாலை, ஏ.பி., சத்திரம் அருகே துவங்கி, மல்லிகாபுரம் விவசாய நிலங்கள் வழியாக, 4.2 கி.மீ., துாரத்திற்கு வேடபாளையம் சாலையில் வந்து இணையும்படி திட்டமிடப்பட்டுள்ளது. சாலை அமையும் இடங்களில், நில எடுப்பு பணிகளுக்கு, முதற்கட்டமாக 7 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story