10 வயது சிறுமி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆறுதல்

10 வயது சிறுமி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆறுதல்
10 வயது சிறுமி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆறுதல்
10 வயது பள்ளி சிறுமியை வெட்டிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசு செலவில் பள்ளி சிறுமியை காப்பாற்ற வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை நேரில் சென்று ஆறுதல். இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட பகுதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமையில் அப்பகுதி மக்களை சந்தித்து விவரம் கேட்டு ஆறுதல் கூறினார்கள் இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி சுரேஷ் கூறும் பொழுது ஐந்து குழந்தைகளை அடைத்து கொலை செய்ய முயற்சித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது இதற்கு துணையாக இருந்த அவரது அம்மா சம்பூர்ணம் மீதும் சம்பவ நேரத்தில் இருந்த உறவினர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் கொடூரமான செயலுக்கு நீதி வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு செலவில் சிகிச்சை அளிக்க வேண்டும் சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் அப்பகுதி குடும்பங்களுக்கு காவல்துறை உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும். உடனடியாக எஸ் ஐ ஆர் முதல் தகவல் அறிக்கை வழங்கி சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள திருச்செங்கோடு காவல்துறை நிர்வாகமும் மாவட்ட காவல்துறை நிர்வாகம் மாவட்ட ஆட்சியரும் தமிழக அரசும் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் ஒன்றிய குழு உறுப்பினர் ஈஸ்வரன் கிளைச் செயலாளர் பூபதி உட்பட பலர் சென்றிருந்தனர்.
Next Story