10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை
Palladam King 24x7 |6 Sep 2024 11:16 AM GMT
மாவட்ட கவுன்சிலர் துவக்கி வைத்தார்
பல்லடத்தை அடுத்த கரைப்புதூர் ஊராட்சி இரண்டாவது வார்டு லட்சுமிநகர் பழைய ரேசன்கடை முதல் வீதியில் தார்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.அதன் அடிப்படையில் மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் கொங்கு ராஜேந்திரன் அவர்களின் 15 வது மத்திய நிதி குழு மானியம் திட்டத்தில் கீழ் சுமார் பத்துலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்க பூமி பூஜை போடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் லட்சுமிநகர் பகுதி பொதுமக்கள்,கரைப்புதூர் ஊராட்சி வளர்ச்சி குழு உறுப்பினர் மல்லிகா முருகதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story