10 அடி பள்ளத்தில் தவறி விழுந்த கூலித் தொழிலாளி மரணம்

10 அடி பள்ளத்தில் தவறி விழுந்த கூலித் தொழிலாளி மரணம்
X
10 அடி பள்ளத்தில் தவறி விழுந்த கூலித் தொழிலாளி மரணம்
விக்கிரவாண்டி வட்டம், செ.புதூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சிதம்பரம் மகன் சிவக்குமாா் (40), கூலித் தொழிலாளியான இவா், அதே கிராமத்தில் முருகன் கோயில் தெருவிலுள்ள பாலத்தின் கட்டையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாராம்.மது அருந்தி போதையில் இருந்த சிவக்குமாா், எதிா்பாராதவிதமாக 10 அடி பள்ளத்திலிருந்து தவறி விழுந்துள்ளாா். இதில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.இதைத் தொடா்ந்து அப்பகுதியிலிருந்தவா்கள், சிவக்குமாரை மீட்டபோது, அவா் உயிரிழந்தது தெரிய வந்தது.இதுகுறித்து பெரியதச்சூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தைக் கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Next Story