10 பவுன் நகை திருட்டு போலீசார் விசாரணை.
பெரம்பலூரில் 10 பவுன் நகை திருட்டு போலீசார் விசாரணை. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அபிராமபுரம் மேற்கு பகுதியில் பிரியதர்ஷினி என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் மணிகண்டன் வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில், தற்போது விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் பிரியதர்ஷினி தனது குடும்பத்துடன் நேற்று முன்தினம் (23.01.2025) இரவு சென்னைக்கு சென்று விட்டு இன்று சுமார் இரவு எட்டு மணி அளவில் வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 10 பவுன் நகை திருடு போய் உள்ளது. இதனை கண்டு அதிர்ச்சடைந்தவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கைரேகை நிபுணர்களை வரவழித்து சோதனை செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story





