10 ஆயிரம் சந்தன மர கன்றுகள் நடும் பணி துவக்கம்

X
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை ஸ்ரீகாஞ்சி காமகோடி மடத்திற்கு சொந்தமான சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் உள்ளது இந்த எஸ்டேட்டில் வன பாதுகாப்பை கருத்தில் கொண்டு வன அபிவ்ருத்தி மரம் நடுவிழா நடந்தது. எஸ்டேட் மேனஜர் வைத்தியநாதன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார், ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரிகள் சசிதர், சுப்பிரமணியன், பெங்களூரு ராயல் இண்டியன் சாண்டல்வுட் இயக்குநர்கள் சந்திரசேகர், ரவிக்குமார், தலைமை செயல் அதிகாரி ராஜன் செட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கணபதி பூஜையுடன் தொடங்கி, வேத மந்திரங்களுடன் முதற்கட்டமாக 10 ஏக்கர் நிலப்பரப்பளவில் சந்தன மரக்கன்றுகள் நடும் பணிகள் துவக்கினார். இதில் ஸ்ரீகாஞ்சி காமகோடி மடாதிபதி சார்பில் சங்கர்ஸ்ரீனிவாசன், இர்னஸ்ட்பாஸ்கர், பொறியாளர் குமார், ஒருங்கிணைப்பாளர்கள் பாலகணேஷ், வெட்கடராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 'வனபாதுகாப்பு மற்றும் அபிவ்ருத்தி, மனிதகுலம், சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. முதற்கட்டமாக 10 ஆயிரம் மரங்களை நட முடிவு செய்து. சந்தன மரக்கன்றுகளை நட்டும் பணிகள் தொடங்கினர். இந்த நிலையில் வனத்துறையினர் கலந்து கொண்டனர்.
Next Story

