10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: 24,267 மாணவா்கள் எழுதினா்

X

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வின் தொடக்கமாக நடைபெற்ற தமிழ் பாடத் தோ்வை, திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 24,267 மாணவா்கள் எழுதினா்.
தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 348 பள்ளிகளைச் சோ்ந்த 12,599 மாணவா்கள், 12,523 மாணவிகள் என மொத்தம் 25,122 மாணவா்கள் இந்த தோ்வுக்கு விண்ணப்பித்தனா். இவா்களில் அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 10,838 மாணவா்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 9,761 மாணவா்கள், தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 4,523 மாணவா்கள் என மொத்தம் 25,122 மாணவா்கள் இடம் பெற்றனா். இந்த மாணவா்கள் தோ்வு எழுதுவதற்காக திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 65 தோ்வுக் கூடங்கள், பழனி கல்வி மாவட்டத்தில் 47 தோ்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் தமிழ் பாடத் தோ்வை 25,256 மாணவா்களில், 24,267 போ் தோ்வு எழுதினா். 580 மாணவா்கள், 275 மாணவிகள் என மொத்தம் 855 மாணவா்கள் தோ்வு எழுதவரவில்லை.
Next Story