10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 390 பேர் ஆப்சென்ட்

தர்மபுரி மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 390 பேர் ஆப்சென்ட்
தர்மபுரி மாவட்டத்தில், 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. ஏப்ரல் 15ம்தேதி வரை நடக்கிறது. இதில் 94 தேர்வு மையங்களில் 10 ஆயிரத்து 314 மாணவர்களும், 9 ஆயிரத்து 566 மாணவிகள் என மொத்தம் 19. ஆயிரத்து 880 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். 390 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. இத்தேர்வை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 218 அரசு பள்ளிகள், 82 தனியார் என மொத்தம் 300 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதினர். தேர்வில் முறைகேடுகளை தடுக்க பறக்கும்படை உள்ளிட்ட 3500 பேர் பணியாற்றுகின்றனர். தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச் ள்சம் மற்றும் கழிவறை வசதிகள் செய்யப்பட் டுள்ளன. தேர்வறையில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Next Story