10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.60,000/- அபராதம்

10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.60,000/- அபராதம்
X
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.60,000/- அபராதம் விதித்து திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு 14 வயது சிறுமியை காதலித்து ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் செட்டியபட்டி பகுதியைச் சேர்ந்த கென்னடி தர்மா(24) என்பவரை அம்பாத்துரை காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அறிவுறுத்தலின்படி அம்பாத்துரை காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார், நீதிமன்ற தலைமைக் காவலர் திருமுருகன் மற்றும் அரசு வழக்கறிஞர் மைதிலி சீரிய முயற்சியால் திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி கென்னடி தர்மா என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.60,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள். மேலும் இந்தாண்டு இதுவரை 29 போக்சோ வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story