ராசிபுரம்: 10 அடி நீளம் பாம்பு மீட்பு
ராசிபுரம் அருகே 10 அடி நீளம் கொண்ட பாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆண்டகளூர்கேட் சக்தி நகர் பகுதியில் உள்ள வழக்கறிஞர் சக்திவேல் என்பவரது தோட்டம் பகுதியில் பத்தடி நீளம் கொண்ட சாரைப்பாம்பு சிக்கியது. சக்திவேல் அவரின் தோட்டப்பகுதியில் புறா வளர்ப்பதற்காக கூண்டு கட்டி வைத்திருந்த கூண்டுக்குள் இறை தேடி உள்ளே நுழைந்துள்ளது இதனைக் கண்ட வழக்கறிஞர் மற்றும் அவர்கள் குடும்பத்தார்கள் அந்த கூண்டை பூட்டிவிட்டு ராசிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கூண்டுக்குள் இருந்த பத்தடி நீளம் கொண்ட சாரைப்பாம்பை லாபகமாக இடுக்கி மூலம் பிரத்யோக கருவி கொண்டு சாரைப் பாம்பை பிடித்து ராசிபுரம் வனத்துறை வசம் ஒப்படைத்தனர். முன்னதாக அப்போது சிறிய புறா ஒன்றை அது விழுங்கி இருந்தது. தீயணைப்புத் துறையினர் பிடிக்கும் போது தப்பிக்க முயன்ற பத்தடி (10) நீளம் கொண்ட பாம்பை பிடித்தனர். இதனால் விவசாய தோட்டம் அருகே கூடி இருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பும் ஏற்பட்டது. பாம்பை பிடித்த தீயணைப்பு வீரர்களுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டும் தெரிவித்தனர்.
Next Story