பாமக- பாஜக கூட்டணிக்கு 10 சதவீத வாக்கு - ஈஸ்வரன்

பாமக- பாஜக கூட்டணிக்கு 10 சதவீத வாக்கு - ஈஸ்வரன்

ஈஸ்வரன் எம்.எல்.ஏ  

பாமகவுடன் கூட்டணி சேர்ந்ததால் பாஜகவிற்கு 10 சதவீத வாக்கு கிடைக்கும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொது செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார்.

பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் நாமக்கல்லில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி அறக்கட்டளை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

தமிழகம் இந்திய நாட்டிற்கு முன்னுதாரணமாக திகழ்கிறது விரும்ப தகாத நிகழ்வுகள் நடைபெறவில்லை தமிழ்நாடு மக்கள் அமைதியானவர்கள் இதனை நிருபித்து காட்டி உள்ளனர் ஆண்களை விட பெண்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர் 11 சதவீதம் மக்கள் வாக்களிக்கவில்லை என்பது வருத்தம். முதல்வர் மற்றும் உதயநிதிக்கு நன்றி. திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் செயலாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி .

தேர்தல் களத்தை பொறுத்த வரை பாமக மாற்று கட்சிக்கு போனாலும் அதிமுக தொய்வு ஏற்பட்டு இருப்பதை காண முடிகிறது தேர்தல் கமிஷன் செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் வாக்கு சாவடி செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் வாக்கு சாவடி அலுவலர்களுக்கு இன்னும் சிறப்பான பயிற்சி வகுப்பு தர வேண்டும் பாமக கூட்டணி உடன் சேர்ந்து பாஜக விற்கு 10 சதவீதம் வாக்கு கிடைக்கும் என நான் நம்புகிறேன் .மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் இனி இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் உண்மையை புரிய வைக்க வாய்புள்ளது என்றார்.

Tags

Next Story