நீலகிரி மாவட்டத்தில் 10 அம்ச கோரிக்கை மனு !

மனு

மனு
நீலகிரி கட்டட பொறியாளர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அனைத்து குடியிருப்பு கட்டட வரைபடங்களை உடனடியாக மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும். நீலகிரி கட்டட பொறியாளர் சங்கம் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட குறைந்தது 2 பொறியாளர்களையாவது மாவட்ட கட்டட திட்ட குழுவில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ளதை போல நீலகிரி மாவட்டத்தில் உள்ள கட்டடங்களின் அதிகபட்ச உயரம் 7 மீட்டர்களில் இருந்து 10 மீட்டராக உயர்த்தப்பட கொள்கை திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.
Next Story


