சேலம் மாநகரில்10 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி
கோவை மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட சேலம், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து வரும் 10 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நேற்று சேலம் மாநகரத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதாவது, காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் தேவராஜன், செவ்வாய்பேட்டைக்கும், ஈரோடு மாவட்டத்தில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் பிரபாகரன், கிச்சிப்பாளையத்திற்கும், அஸ்தம்பட்டியில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் கணேசன், மாநகர கடுங்குற்றப்பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல், திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சேலம் டவுன் குற்றப்பிரிவுக்கும், மனிதவளம் மற்றும் சமூக சீர்திருத்தப்பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா, கிச்சிப்பாளையம் குற்றப்பிரிவுக்கும், பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சம்பங்கி, அன்னதானப்பட்டிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும் ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் அன்பரசு, பள்ளப்பட்டி குற்றப்பிரிவுக்கும், செவ்வாய்பேட்டை இன்ஸ்பெக்டர் சந்திரகலா, மனிதவளம் மற்றும் சமூக சீர்திருத்தப்பிரிவுக்கும், அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சிவகுமார், வெடிகுண்டு தடுப்பு பிரிவுக்கும், அங்கு பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் ராணி, கொண்டலாம்பட்டி குற்றப்பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி பிறப்பித்துள்ளார்.