புகையிலைப் பொருட்களை விற்பனையால் 10 கடைகளுக்கு சீல் !

புகையிலைப் பொருட்களை விற்பனையால் 10 கடைகளுக்கு சீல் !

புகையிலைப் பொருட்கள்

திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி தலைமையில், திண்டுக்கல் நகர், புறநகர்,வேடசந்தூர், எரியோடு,ஆத்தூர், நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள பெட்டிக்கடை,மளிகை கடைகளில் திடீரென சோதனை நடத்தினர்.இதையடுத்து 50 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி தலைமையில், அலுவலர்கள் செல்வம், முருகன், ஜோதிமணி, ஜாபர் சாதிக்,சரண்யா,கண்ணன் ஆகியோர் திண்டுக்கல் நகர், புறநகர்,வேடசந்தூர், எரியோடு,ஆத்தூர், நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள பெட்டிக்கடை,மளிகை கடைகளில் திடீரென சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.இதையடுத்து 50 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் கடையின் உரிமையாளர்கள் கமல் சேட் (வயது 65),வாசிக் அக்ரம் (28), சரவணன் (50),பாலசிங் (40), முத்துப்பாண்டி (54), லோகநாதன் (32), நல்லுசாமி (60) உள்ளிட்ட 10 பேருக்கு தலா ரூ 25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

மேலும் 10 கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.இதையடுத்து உணவு பாதுகாப்பு விதிகளின்படி 4 பேர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story