விழுப்புரத்தில் பெண்ணிடம் 10 சவரன் நகை பறிப்பு

X
கோப்பு படம்
விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஆடல் நகரை சேர்ந்தவர் பிரேமா 61., ஓய்வு பெற்ற செவிலியர்.இவர் நேற்று இரவு தந்தை பெரியார் நகர் பஸ் நிறுத்தத்தில் இருந்து வீட்டிற்கு நடந்த சென்றார். அப்பொழுது பைக்கில் வந்த இருவர் திடீரென அவர் கழுத்தில் இருந்த 10 சவரன் செயினை பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
