அரிசி கிலோவுக்கு ரூ.10 முதல் 15 வரை விலை உயர்வு
பைல் படம்
தமிழகத்தின் மொத்த நெல் தேவையை பூர்த்தி செய்வது டெல்டா மாவட்டங்களாகும். டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் விளைச்சல் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. மேலும் தமிழகத்திற்கு கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து வரவேண்டிய அரிசியும் வரத்த்து குறைவாக காணப்படுகிறது கர்நாடகா ஆந்திரா மாநிலங்களில் நெல் கொள்முதல் விலை உயர்ந்துள்ளதால் தமிழகத்திற்கு நெல் வரத்து குறைவாக காணப்படுகிறது மேலும் வெளிநாடுகளுக்கு அரிசி அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுவதால் அரிசி வரத்து குறைவாக காணப்படுகிறது.
இதன் காரணமாக தூத்துக்குடி அரிசி மார்க்கெட்டில் அரிசி கிலோவிற்க்கு பத்து ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது 5 கிலோ மற்றும் 10 கிலோ பைகளுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி வரித்துள்ளதால் அரிசி விலை உயர்வுடன் ஜிஎஸ்டி வரி உயர்வு ஆகியவை காரணமாக 5 கிலோ 10 கிலோ பைகள் 270 ரூபாயில் இருந்து 350 ரூபாய் வரையும் 310 ரூபாய் விற்பனையான பைகள் 3 60 ரூபாய் வரையும் விற்பனையாகிறது 26 கிலோ பைகள் 1300 ரூபாய் வரை விற்பனையானது தற்போது 1750 ரூபாய் வரை விற்பனையாகிறது இந்த அரிசி விலை உயர்வு காரணமாக சாதாரண ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்த அரிசி விலை உயர்வு தமிழகத்தில் மதுரை சிவகங்கை இராமநாதபுரம் மற்றும் நெல்லை மாவட்டங்களில் இருந்து அரிசி உற்பத்தி ஆகி விளைந்து வர இன்னும் மூன்று மாத காலம் ஆகும் என்பதால் அதற்கு பின்பு விலை குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்