கஞ்சா கடத்தல் வழக்கில் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை

கஞ்சா கடத்திய வழக்கில் 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

ஆந்திராவில் இருந்து தேனிக்கு போதை பொருட்கள் கடத்தப்படுவதாக திருச்சி போதைபொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடந்த 23.3.2022 அன்று சமயபுரம் அரு கில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். இதில், 22 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கார் உரிமையாளரான தேனி மாவட்டத்தை சேர்ந்த புவனேஸ்வரன்(35), ஆசை(37), குமார் (42) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டை அத்தியாவசிய பண்டங்கள் சட்ட சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி பாபுலால் விசாரித்து புவனேஸ்வரனுக்கு போதைபொருள் கடத்திய குற்றத்துக்காக 10 ஆண்டு கள் சிறை தண்டனையும், ரூ. ஒரு லட்சம் அபராதமும், அபராதத் தொகை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறையும், போதை பொருள் கடத்த காரை பயன்படுத் தியதற்காக 10 ஆண்டுகள் சிறையும், ரூ. ஒரு லட்சம் அபராதமும், அபராதத் தொகை கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறையும், தண்டனையை ஏக காலத் தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். ஆசை மற்றும் குமார் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண் டனையும், ரூ. ஒரு லட்சம் அபராதமும், அபராதத் தொகை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்தார். அரசு தரப் பில் வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி வாதாடினார்.

Tags

Read MoreRead Less
Next Story