பெண்ணை ஏமாற்றிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

பெண்ணை ஏமாற்றிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

ராஜேந்திரன் 

கோட்டகுப்பம் அருகே திருமணம் செய்வதாக கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வானூர் வி.பரங்கனி பகுதியைச் சேர்ந்த முனுசாமி மகன் ராஜேந்திரன் (23). கடந்த 17.07.2020 அன்று 21 வயது நிரம்பிய பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு செய்து, திருமணம் செய்யாமல் ஏமாற்றி உள்ளார். இது குறித்து அந்த இளம் பெண் கொடுத்த புகாரின் பேரில் கோட்டகுப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையம் வழக்கு பதிவு செய்தனர். வழக்கினை விசாரணை செய்த விழுப்புரம் மகளிர் நீதிமன்ற நீதிபதி காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து திருமணம் செய்யாமல் ஏமாற்றிய நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் பத்தாயிரம் அபராதமும் விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

Tags

Next Story