பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு சிறை தண்டனை

பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு சிறை தண்டனை

சிறை தண்டனை பெற்றவர் 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கீழநெட்டூரைச் சேர்ந்தவர் செல்வம் (35). இவர் கடந்த 2015 செப்.4-ம் தேதி ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தி கூறி பலாத்காரம் செய்தார். பின்னர் அந்த பெண்ணை திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக கூறப்படும் நிலையில், விரக்தியில் அந்த பெண் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து சிவகங்கை அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து செல்வத்தை கைது செய்துள்ளனர். இந்த வழக்கு சிவகங்கை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி சரத்ராஜ், குற்றம் நிரூபிக்கப்பட்ட செல்வத்துக்கு பலாத்காரம் செய்ததற்காக 10 ஆண்டுகள் சிறை, ரூ.10,000 அபராதம், பெண்ணை ஏமாற்றியதற்காக ஓராண்டு சிறை, ரூ.2,000 அபராதம் விதித்தார்.

மேலும் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

Tags

Read MoreRead Less
Next Story