ரூ.100 கோடியில் நீர் மேலாண்மை திட்டம்- ஜோதிமணி பேட்டி.

ரூ.100 கோடியில் நீர் மேலாண்மை திட்டம்- ஜோதிமணி பேட்டி.
ரூ.100 கோடியில் நீர் மேலாண்மை திட்டம்- ஜோதிமணி பேட்டி. கரூர் ஜவகர் பஜார் பகுதியில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்க வந்த கரூர் எம்பி ஜோதிமணி நிகழ்ச்சியின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கரூர் மாவட்டத்தில் உள்ள தாதம்பாளையம், வெள்ளியணை, பஞ்சப்பட்டி ஏரிகளை தூர் வாருவதற்காக முதல் கட்டமாக ரூபாய் 17 லட்சம் நிதி ஒதுக்கி அறிக்கை தயார் செய்து வருகின்றனர். அதன் பிறகு, தற்போது அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், ஒட்டன்சத்திரம், நத்தம், ஆத்தூர், ஆகிய ஆறு தொகுதிகளில் நீர் மேலாண்மை செய்வதற்காக தமிழக அரசு ரூபாய் 100 கோடி ஒதுக்கி உள்ளதாகவும், கடந்த 50 முதல் 70 ஆண்டுகளாக இந்த திட்டம் நீண்ட கால கோரிக்கையாகவே உள்ளது. அதனால், இந்த திட்டத்தை செயல்படுத்த சிறிது காலம் ஆகும். ஆயினும், இத்திட்டத்தை விரைவில் செயல்படுத்த முடியும் என நம்புவதாக தெரிவித்தார். மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்தப்படும் மது ஒழிப்பு மாநாட்டுக்கு காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்தால் அது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் முடிவெடுப்பார் என தெரிவித்தார்.
Next Story