100 நாள் வேலை வழங்காத பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்
Maduranthakam King 24x7 |21 Sep 2024 11:45 AM GMT
100 நாள் வேலை வழங்காத பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 23 கொளத்துார் ஊராட்சியில் ஆயகுனம், புத்தமங்கலம், மேட்டு கொளத்துார்,பள்ள கொளத்துார் உள்ளிட்ட 4 கிராமங்கள் உள்ளன. ஊராட்சியில் சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். 2024–25 நிதி ஆண்டில் இந்த ஊராட்சியில் 7 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டதாகவும், குளம் மற்றும் பண்ணைக் குட்டை அமைக்க இடம் தேர்வு செய்யப்படாததால், வேலை நடைபெறாமல் நிறுத்தப்பட்டு உள்ளதாக கூறி இன்று ஊராட்சி மன்ற அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட மக்கள் திரண்டனர். அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்கும் விழாவிற்கு அந்த வழியாக சென்ற, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் அலுவலகம் முன் திரண்டு இருப்பதைக் கண்டு , தனது ஆதரவாளர்களுடன்,பொதுமக்களுடன் இணைந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின் சம்பவ இடத்திற்கு வந்த அச்சிறுப்பாக்கம் போலீசார் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தி, முறையாக துறை சார்ந்த அலுவலர்களிடம் மனு அளிக்க வலியுறுத்தியதை அடுத்து, மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Next Story