100 நாள் வேலை கேட்டு பொலிரோவில் வந்து சென்ற சீமானின் தாயார்
Sivagangai King 24x7 |25 Dec 2024 2:15 PM GMT
இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு 100 நாள் வேலை கேட்டு பொலிரோவில் வந்து சென்ற சீமானின் தாயார்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே அரணையூர் கிராம மக்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் பணி ஏற்கனவே வழங்கப்பட்டு வந்தது. இதன் மூலம் குளங்கள், வரத்து கால்வாய் சீரமைப்பது மற்றும் மரக்கன்றுகளை நடுவது பணிகளை மேற்கொண்டு வந்தனர். இப்பணிகள் நிறைவடைந்த நிலையில் கடந்த சில நாட்களாக இக்கிராமமக்களுக்கு 100 நாள் வேலை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை அடுத்து இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் ஒன்றிணைந்து வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் சந்தித்து மீண்டும் தங்களுக்கு பணி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். இவர்களோடு இக்கிரமத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தாயார் அன்னமாளும் 100 நாள் வேலைவாய்ப்பு வழங்குமாறு கேட்டு வந்திருந்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் அரசின் ஒப்புதல் பெறப்பட்டு 100 நாள் வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனை அடுத்து சீமானின் தாயார் அன்னமாமாள் நாம் தமிழர் கட்சி கொடிக்கட்டி வந்த பொலிரோ வாகனத்தில் ஏறி சென்றார். 100 நாள் வேலைவாய்ப்பு கேட்டு சீமானின் தாயார் கிராம மக்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வந்தது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Next Story