100-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில்

100-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில்
யார் அந்த சார் என்ற ஸ்டிக்கர் ஒட்டி அரசுக்கு அதிமுக எதிர்ப்பு
நாகை மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன் ஆலோசனையின் பேரில், அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில், வாகனங்களில், யார் அந்த சார் என்ற வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி நேற்று நாகை மாவட்டம் முழுவதும் நடைபெற்றது. நாகை கடைத்தெருவில் நகர செயலாளர் தங்க.கதிரவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 100-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களின் முகப்பில், நகர செயலாளர் தங்க.கதிரவன், யார் அந்த சார் என்ற வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கரை ஒட்டினார். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதற்கு எதிராக, யார் அந்த சார் என்ற வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story