100 வருடம் பழமையான மரத்தின் வேர் சென்று குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டிற்குள் சென்றதால் வீடு இடிந்து விழுந்து முற்றிலும் சேதம்*

X
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் 100 வருடம் பழமையான மரத்தின் வேர் சென்று குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டிற்குள் சென்றதால் வீடு இடிந்து விழுந்து முற்றிலும் சேதம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே 15 வது வார்டுக்கு உட்பட்ட ஊரணிப்பட்டி தெருவில் சுமார் 100 வருட பழமையான அரசமரம் வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் அரச மரத்தின் அருகே மலையடிப்பட்டி பகுதியில் வசித்து வரும் சிவஞானம் என்பவருக்கு சொந்தமான மற்றொரு வீடு உள்ளது. அரச மரத்திற்கு அருகே வீடு இருந்ததன் காரணத்தினால் அரச மரத்தின் வேரானது வீட்டின் அடிப்பகுதியில் படர்ந்து வளர்ந்து வந்த நிலையில் வேரின் அழுத்தம் தாங்காமல் இன்று திடீரென சிவஞானத்திற்க்கு சொந்தமான வீடு மேற் கூரை இடிந்து விழுந்து முற்றிலும் சேதம் அடைந்தது. மேலும் வீட்டில் சமீப காலமாக யாரும் இல்லாததால் உயிர் சேதமும் பொருள் சேதமும் ஏற்படாத நிலையில் விபத்து தவிர்க்கப்பட்டது. நூறு வருட பழமையான மரத்திற்கு கீழே இருந்த வீடு மரத்தின் வேரால் பாதிப்படைந்து இடிந்து விழுந்து சேதமானது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Next Story

