100 நாள் பணி அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருவள்ளூர்: ஒரு கோடியே 74 லட்ச ரூபாய் மதிப்பில் புதிதாக சாலை அமைக்கும் பணி பூமி பூஜை விழாவில் பங்கு பெற்ற திமுக மாவட்ட பொறுப்பாளரிடம் மகளிர் உரிமை தொகை ஊராட்சியில் 100 நாள் பணி அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்த பொதுமக்கள் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எருக்குவாய் ஊராட்சியில் மணலி முதல் புது ராஜா கண்டிகை வரை சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை ஒரு கோடியே 74 லட்சம் மதிப்பில் சாலை மற்றும் கல்வெட்டு அமைக்கும் பணிக்காக பூமி பூஜை பணிகள் இன்று தொடக்கி வைக்கப்பட்டது இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் கும்முடிபூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிஎச் சேகர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். அப்போது திமுக மாவட்ட கழக பொறுப்பாளர் எம்எஸ்கே ரமேஷ் ராஜ் பேசுகையில் முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு மக்களின் குறைகளை கேட்டறிந்து அனைத்தையும் செய்து தருகிறார் என்றும் அனைவரும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தவை பெறுகிறீர்களா என கேட்டார் அப்போது அனைவருக்கும் கிடைக்கவில்லை அனைவருக்கும் கிடைக்கும் படி செய்யுங்கள் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 100 நாள் பணி முறையாக வழங்க நடவடிக்கை எடுங்கள் எடுங்கள் என கோரிக்கை வைத்தனர்
Next Story







