100 சதவீதம் புகையிலை விற்பனை செய்யப்படுவதில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்

100 சதவீதம் புகையிலை விற்பனை செய்யப்படுவதில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்
X
திருமருகலில் நடந்த வணிகர்கள் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
நாகை மாவட்டம் திருமருகல் ஒரு தனியார் திருமண மண்டபத்தில், திருமருகல் வணிகர்கள் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, வணிகர்கள் கூட்டமைப்பு தலைவர் ஜெயபாலசங்கர் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் குமரகுருபரன், சதீஷ், பாண்டியன், குணசேகரன், மலர்வண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, செயற்குழு உறுப்பினர் நெடுஞ்செழியன் வரவேற்றார். பொருளாளர் ஹரிஹரன் வரவு செலவு அறிக்கை மற்றும் தீர்மானத்தை வாசித்தார். கூட்டத்தில், துணைத் தலைவர் காசி அறிவழகன், செயலாளர் காமராஜ், முன்னாள் தலைவர் தியாக சத்தியமூர்த்தி, முன்னாள் செயலர் சுப்பிரமணியன், சட்ட ஆலோசகர் ரமேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில், வணிகர்கள் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று, நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ், சந்தைப்பேட்டையில் பயணிகள் நிழலகம் அமைத்து தர நிதி ஒதுக்கீடு செய்த நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ், பரிந்துரை செய்த தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ.செங்குட்டுவன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தும், செங்கல்பட்டு மதுராந்தகத்தில் நடைபெறும் 42-வது வணிகர் மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது, வர்த்தகர்கள் 100 சதவிகிதம் புகையிலை மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்வதில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், செய்தி தொடர்பாளர் ரஞ்சித்சிங் உட்பட நிர்வாகிகள், வர்த்தகர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில், துணைச் செயலாளர் முருகானந்தம் நன்றி கூறினார்.
Next Story