100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் நாட்கள் குறைப்பு குறித்து மதுரை எம்பி கண்டனம் .
நூறு நாள் வேலை நாட்கள் குறைந்தது குறித்து மதுரை எம்.பி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் கூறியிருப்பதாவது நூறு நாள் திட்டத்தை முடக்கி நிதி பட்டினி போடும் மோடி அரசு. ஏப்ரல், மே மாதங்களில் 2.09 கோடி மனித வேலை நாட்கள் நமக்கு கிடைத்திருக்க வேண்டும். கிடைத்ததோ 59 லட்சம் மனித வேலை நாட்கள் மட்டுமே. ஒன்றிய அரசின் அநீதியால் 88 லட்சம் தமிழ்நாடு கிராமப்புற உழைப்பாளி மக்கள் பாதிப்பு அடைந்துள்ளதாக மதுரை எம்பி வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
Next Story



