100 வருடங்களுக்கு மேல் இருக்கும் கழிப்பிடத்தின் நிலை
ஆண்டுகள் பழமையான ஆரணி 127பிரிவுநிலைப் பேரூராட்சியில் கழிப்பிடத்தின் அவலம். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் 127 ஆண்டுகள் பழைபையான பேரூராட்சியாக ஆரணி உள்ளது. பழைய பேரூராட்சி கட்டடம் இடித்து அகற்றி புதிதாக கட்டுமானம் நடைபெறும் நிலையில் ஆரணி ஆற்றங்கரையை ஒட்டிய குப்பை கொட்டும் இடத்தில் கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடத்தில் தற்காலிகமாக ஆரணி தேரிவுநிலை பேரூராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது இங்குள்ள பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பயன்படுத்தும் கழிப்பிடம் பெயர்ந்து பயன்படுத்த முடியாத அளவிற்கு நொறுங்கி உள்ளது 5.90 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஆரணி முதல் நிலைப் பேரூராட்சி, 15 வார்டுகளும், 210 தெருக்களும் உள்ள நிலையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட பேரூராட்சியில் கழிப்பிட வசதியின்றி பேரூராட்சி அலுவலகமே பரிதாபகரமான நிலையில் இருப்பது அனைவரையும் வேதனை அடையச் செய்துள்ளது
Next Story




