100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து

100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து
X
கொடைக்கானல் ரோடு மேல் பள்ளம் அருகே 100 அடி பள்ளத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த கார் கவிழ்ந்து விபத்து. எட்டு பேர் படுகாயம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு இன்று கேரள மாநிலம் மலப்புரம் சேர்ந்த எட்டு சுற்றுலா பயணிகள் பழனி பிரதான மலை சாலை வழியாக கொடைக்கானல் நோக்கி வந்து கொண்டிருந்தனர் சுற்றுலா பயணிகள் வந்த வாகனமானது மேல்பள்ளம் அருகே வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டு இழந்து சாலையின் வலது பக்க தடுப்பு சுவரை இடித்துக் கொண்டு சுமார் 200 அடி பள்ளத்தில் பாய்ந்து மரத்தின் மீது மோதி நின்றது. மேலும் வாகனத்தில் வந்த சுற்றுலா பயணிகள் சிறு சிறு காயங்களுடன் உயிர்த் தப்பினர். மேலும் சுற்றுலா பயணிகள் வாகனத்தை தூக்க கலக்கத்தில் ஓட்டி வந்த காரணத்தாலே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று தெரிய வருகிறது. மேலும் குறிப்பாக பழனிச்சாலையில் பல இடங்களில் முறையான தடுப்பு சுவர் இல்லாத காரணத்தாலே இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. எனவே பழனி வழி சாலையை பயன்படுத்தும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு சாலைகளில் இடிந்து கிடக்கும் தடுப்பு வேலிகள் மற்றும் தடுப்பு விழிகள் இல்லாத இடத்தில் தடுப்பு விழிகள் அமைப்பதற்கு நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்து வருகிறது.
Next Story