100-மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர்களை வழங்கினார் செந்தில் .

100-மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர்களை வழங்கினார் செந்தில் .
100-மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர்களை வழங்கினார் செந்தில் . கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் மாணிக்கம் , இளங்கோ ,சிவகாமசுந்தரி,கரூர் மாநகராட்சி மேயர் கவிதா , துணை மேயர் சரவணன் ,மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் , மாற்றுத்திறனாளிகள் மாவட்ட நல அலுவலர் மோகன்ராஜ் ,பயனாளிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் , சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மாற்றுத்திறனாளிகள் 100 பேருக்கும் இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். ஸ்கூட்டர்களை பெற்றுக் கொண்ட மாற்றுத்திறனாளிகள் செந்தில் பாலாஜி , மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
Next Story