100 நாள் வேலைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்

X
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பாக்கம் கோட்டூரில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 32 -வது கிளை மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு, கட்சியின் நிர்வாகிகள் பாலு மற்றும் சேகர் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநாட்டில். கட்சியின் நிர்வாகி ரமேஷ் குமார் வேலைவாய்ப்பு அறிக்கை மற்றும் வரவு செலவுகளை முன் வைத்தார். மாநாட்டில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில், கோட்டூர் கடைவீதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும். பாக்கம் கோட்டூரில் அனைத்து மக்கள் பயன்பெறும் வகையில் சமுதாயக்கூடம் அமைத்து தர வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பாக்கம் கோட்டூரில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில், ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், விவசாய சங்க மாவட்ட பொருளாளர் பாபுஜி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மாநாட்டில், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ், நிர்வாக குழு உறுப்பினர் மகேந்திரன், இளைஞர் மன்ற ஒன்றிய செயலாளர் தண்டபாணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில், கிளை செயலாளராக ரமேஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Next Story

