100 நாள் வேலை வழங்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு

X
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள வல்லாரேந்தல் கிராமத்தில், சுமார் 100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் முன்பு வேலை செய்து வந்துள்ளனர். ஆனால் கடந்த ஒரு ஆண்டுகளாக 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் செயல்படாததால், அவர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், வேலை இருந்தும், பஞ்சாயத்து நிர்வாகம் வழங்க மறுக்கிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து, வேலை வழங்குமாறு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆசா அஜித்தை சந்தித்து மனு அளித்தனர்.
Next Story

