100 அடி கிணற்றில் சிக்கிய நாய் – தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்ட நெகிழ்ச்சி சம்பவம்!

100 அடி கிணற்றில் சிக்கிய நாய் – தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்ட நெகிழ்ச்சி சம்பவம்!
X
நூறு அடி கிணற்றில் விழுந்த நாயை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்.
கோவை ஊஞ்சபாளையம் அருகே முருங்கைக்காடு தோட்டத்தில், முன்னாள் ஊராட்சி தலைவர் பாலுவின் வளர்ப்பு நாய் ‘ஜெட்’, 100 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த கருமத்தம்பட்டி தீயணைப்பு வீரர்கள், இரண்டு நாட்களுக்குப் பிறகு அதனை உயிருடன் மீட்டனர். பாலுவின் வீட்டில் குழந்தைகள் வளர்த்து வந்த ஜெட், மற்ற நாய்கள் துரத்திய போது கிணற்றில் விழுந்தது. வீடு திரும்பிய குழந்தைகள் நாயை காணாமல் வருந்த, தேடியபோது அதன் குரல் கிணற்றிலிருந்து கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. வீட்டினர் அழைத்ததையடுத்து வந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றை சுத்தம் செய்து, வீரரொருவரை கயிறு மூலம் இறக்கி, நாயை பாதுகாப்பாக மீட்டனர். உயிருடன் மீட்கப்பட்ட ஜெட்டை கண்டதும் குழந்தைகள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். இதற்காக தீயணைப்பு வீரர்களுக்கு குடும்பத்தினர் நன்றியுணர்வு தெரிவித்தனர். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story