100 நாள் வேலை கேட்டு பொதுமக்கள் மறியல்

X
கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அடுத்த ஈருடையாம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட மேட்டுக்குப்பம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் கடந்த சில மாதங்களாக வேலை வழங்கப்படவில்லை. மேலும், அப்பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை.இக்கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் நேற்று மூங்கில்துறைப்பட்டு திருவரங்கம் சாலையில் காலை 8:30 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர்.
Next Story

