100 சதவீதம் பதிவேற்றம் செய்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பொன்னாடை அணிவித்து, கேடயம் வழங்கி கௌரவித்த மாவட்ட ஆட்சியர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 25.11.2025 அன்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவங்களை வாக்காளர்களிடமிருந்து பெற்று BLO App மூலம் 100 சதவீதம் பதிவேற்றம் செய்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பொன்னாடை அணிவித்து, கேடயம் வழங்கி கௌரவித்தார்.இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் -2026 நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கணக்கீட்டுப் படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கி நிரப்பப்பட்ட படிவங்களை மீண்டும் பெற்று BLO App மூலம் பதிவேற்றும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், வாக்காளர்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவம் விநியோகிக்கும் பொருட்டு, 1629 வாக்குச்சாவடி நிலை அலுவலர் நியமிக்கப்பட்டு, கடந்த 04.11.2025 முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்பணியில தன்னார்வலர்களும் பங்கேற்று சிறப்பாக செய்து வருகின்றனர்.அந்த வகையில், 1629 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களில் 92.இராசிபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் கிராம உதவியாளர் A.கோபாலகிருஷ்ணன், சத்துணவு திட்ட பணியாளர் R.ஜெயந்தீஸ்வரி, 94.நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் கிராம உதவியாளர்கள் பழனிவேல், N.பெருமாள் ராஜ், அங்கன்வாடி பணியாளர்கள் லட்சுமி, D.சுதா, வீனா மற்றும் கிராம நிர்வாக அலுவலர் விஜய ஸ்ரீ, 95.பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதியில் அங்கன்வாடி பணியாளர் சசிகலா என 9 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை 100 சதவீதம் எய்துள்ளனர்.அதனைத் தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆட்சியர் மேற்படி 9 வாக்குச்சாவடிநிலை அலுவலர்களை பாராட்டி, பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கி கௌரவித்தார். மேலும் நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் மீதமுள்ள அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கீட்டு படிவங்களை 100 சதவீதம் விநியோகித்து, நிரப்பப்பட்ட படிவங்களை மீண்டும் பெற்று BLO App-ல் பதிவேற்றம் செய்து, விரைவில் இப்பணியினை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.முன்னதாக, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரிதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள், தங்களது கட்சியின் வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க அறிவுறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.தொடர்ந்து, நாமக்கல் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் கணக்கீட்டுப் படிவங்களை பதிவேற்றம் செய்யும் பணியினை கள ஆய்வு மேற்கொண்டார்.இந்நிகழ்வுகளில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட வருவாய் அலுவலர் மா.க.சரவணன், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) ச.வடிவேல், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.பிரபாகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) லீலாகுமார், மாவட்ட திட்ட அலுவலர் திருமதி போர்ஷியா ரூபி, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் வே.சாந்தி, தனி வட்டாட்சியர் (தேர்தல்) அ.செல்வராஜ் உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.


