100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை மாற்றி திட்டத்தை முடக்கும் பாஜக அரசே கண்டித்து திமுக கூட்டணி கட்சி ஆர்ப்பாட்டம்!!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றி, திட்டத்தை முடக்கும் நோக்கத்தோடு செயல்படும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மணமேல்குடி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக பொருளாளர் அபுதாகிர் தலைமை தாங்கினார். புதுக்கோட்டை தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணித் தலைவர் ஆவுடையூனுஸ் வரவேற்றார். மணமேல்குடி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சக்தி இராமசாமி ஆர்ப்பாட்டத்தை விலக்கி கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் வட்டார காங்கிரஸ் தலைவர் சரவணன், கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் வீரையா, மாவட்ட பிரதிநிதிகள் குமரேசன், கணேசன், மணிமொழியன்,ஒன்றிய துணைச் செயலாளர்கள் வீரப்பன், பால்ராஜ்,சக்திவேல், மாலதிகணேசன், கலந்தர் நைனா முகமது, நகரச் செயலாளர் ராஜா,மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ரம்யா பாலு, மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் செந்தில்வேலன், முகமதுநலீம், நாகராஜன், குத்புதீன், ஷாஜகான், தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் அறந்தாங்கிசெந்தில்வேலன், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் நைனாமுகமது, முகமது பாருக், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் அகிலன், பிரபுராமன், துணை அமைப்பாளர்கள், விக்னேஷ்வரன், ராஜாராமன், முகமது இம்தியாஸ், ஒன்றிய பொறியாளர் அணி அமைப்பாளர் பார்த்திபன் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். இந்திய கம்யூ நிர்வாகி ராஜேந்திரன் நன்றி கூறினார்.
