100 நாள் வேலை திட்டத்தை பழைய நடைமுறைப்படி அமல்படுத்த கோரி மாற்றுத் திறனாளிகள் புதிய திட்டத்தின் நகலை கிழித்தெறிந்து போராட்டம்

X
Tiruchengode King 24x7 |6 Jan 2026 9:06 PM IST100 நாள் வேலை திட்டத்தை பழைய நடைமுறைப்படி அமல்படுத்த கோரி மாற்றுத் திறனாளிகள் புதிய திட்டத்தின் நகலை கிழித்தெறிந்து போராட்டம் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் முதியவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
ஒன்றிய பாஜகஅரசு மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை பெயர் மாற்றம் செய்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து புதிய 125 நாள் வேலை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் படி மாற்று திறனாளிகள் முதியவர்கள் வேலைவாய்ப்பு பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இதனை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கிராமப்புற மாற்றுத்திறனாளிகள் புதிய 100 நாள் திட்டத்தின் நகலை கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் குமாரபாளையம் பகுதி துணைச் செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். கிராமப் பகுதியில் இருந்து பெண்கள் முதியவர்கள் உள்ளிட்ட பல்வேறு மாற்றுத்திறனாளிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு இந்தத் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். அதனைத் தொடர்ந்து அந்த திட்டத்தின் நகலை கிழித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்தப் போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் முதியவர்கள் என பலரும் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
Next Story
