100 நாள் வேலை செய்து கொண்டிருந்த 10 பேரை தேனீக்கள் கொட்டியதால் பரபரப்பு.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது பூமாரி கிராமம். இந்த கிராமத்தில் இன்று காலை வழக்கம் போல் 100 நாள் வேலை என சொல்லப்படும் ஏரி வேலைக்கு அங்கிருந்த மக்கள் சென்றுள்ளனர். அப்போது செடிகளை வெட்டி அப்புறப்படுத்த முற்பட்டுள்ளனர். அப்போது செடிகளுக்கு நடுவே இருந்த சிறிய அளவிலான தேனீக்கள் அங்கிருந்தவர்களை கொட்டியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட 10 நபர்கள் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அனைவருக்கும் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து அனைவரும் வீடு திரும்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்து அங்கு சிகிச்சையில் இருந்தவர்களிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். அதன் பின்னர் அவர்களை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story